Online fake form filling job

Name of Complainant Madhan
Date of ComplaintMay 23, 2021
Name(s) of companies complained against
Category of complaint Internet Services
Permanent link of complaint Right click to copy link
Share your complaint on social media for wider reach
Facebooktwitterredditpinterestlinkedinmail
Text of Complaint by Madhan:

ஐயா/மேடம் எனக்கு சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு டேக்ஸ்ட் மசாஜ் ஒன்று எனது போன் எண்ணிற்கு வந்தது அதில் ஆன்லைன்யில் பகுதி நேர வேலை ஒன்று தருவதாகவும் வாரம் 24000 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனது தாய் கூலிவேளை பார்த்து வருகிறார் அவருக்கு நாள் ஒன்றுக்கு வருமானம் ரூபாய் 250 எனக்கு தந்தை இல்லை தாய் மட்டுமே உள்ளார் எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். எனது தாயின் வருமானம் போதுமானதாக இல்லை என்ற காரணத்தினாலும் வீடு கூட சொந்தமகா இல்லை என்ற மனநிலயும் என்னை இந்த வேலையை செய்யதூண்டியது. எனக்கு 16 வயது தான் ஆகிறது என்ற காரணத்தினால் நான் ஒரு நண்பரின் அடையாள அட்டையை வைத்து இந்த பணியில் சேர்ந் தேன். பிறகு நான் இந்த பணியில் சேர்த்த அடுத்த நாள் முதல் நான் பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் நிலையில் எனக்கு முதல் திருப்புதல் தேர்வு ஆரம்பித்து விட்ட காரணத்தினால் என்னால் இந்த பணியை தொடர முடியவில்லை. இது குறித்து நான் இந்த கம்பெனிக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து நான் கஸ்டமர் கேர் எண்ணிற்கு அழைத்தேன் பதில் கூறவில்லை. நான் அப்போது இந்த கம்பெனி பொய்யான கம்பெனி என்று நினைத்து வேலை செய்வதை நிறுத்தி விட்டு படிக்க தொடங்கினேன். mendum15 நாட்கள் கழித்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது அதில் என்மீது வழக்கு தொடரப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நான் இதைகண்டு மனஉளைச்சளுக்கு அழனேன். பிறகு ஒரு மாதம் கழித்து வாட்ஸாப்ப்பில் எனக்கு வழக்கறிஞர் போன்று மசாஜ் அனுப்பி என்னிடம் ரூபாய் 1.80லட்சம் பணம் கட்ட சொல்லி தொந்தரவு செய்கிறார்கள். இது போன்ற ஆன்லைன் திருடர்களை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தர வேண்டும். இதனால் பல அப்பாவி ஏழை மாணவர்களின் வாழ்க்கையும் படிப்பும் பதிப்படையாமல் இருக்கும் என நான் நண்பிகிறேன். என்னை இவர்கள் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள். இது சம்பந்தமான சில படங்களை இணைத்துள்ளன்.

Image Uploaded by Madhan:

Online fake form filling job

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *